உலகைச் சுற்றி...

ரஷியாவின் கோமன்டர்ஸ்கை தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-06-19 22:45 GMT

* அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் நீடித்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சின்போது, இம்மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் இடையே இருவரும் சந்தித்து பேசுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

* நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள போங்காகவா நகரில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

* சீனாவின் ஹூனான் மாகாணத்தில் போதைப்பொருளை கடத்தி வந்து புழக்கத்தில் விட்ட வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* ரஷியாவின் கோமன்டர்ஸ்கை தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

மேலும் செய்திகள்