பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை :பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-06-22 02:38 GMT
ஜெனீவா,

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவியை தடுப்பதில்லை எனவும் சர்வதேச பயங்கரவாதிகளை சுதந்திரமாக தனது மண்ணில் உலவ விடுவதாகவும் இந்தியா உள்பட உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.  இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி கிடப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து விட்டதாக  சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு (எப்.ஏ.டி.எப். ) தெரிவித்துள்ளது.

பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த அமைப்பு பயங்கரவாதத்துக்கான நிதி உதவியை தடுப்பது மட்டுமன்றி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கிறது.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஒர்லாண்டாவில் நேற்று நிறைவடைந்த அந்த அமைப்பின் கூட்டத்துக்கு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கும் நிதி கிடைப்பதையும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளையும் தடுப்பதில் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை, வரும் அக்டோபருக்குள் பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் கருப்புப் பட்டியலில் அந்நாடு சேர்க்கப்படும் என்று எப்.ஏ.டி.எப் எச்சரித்துள்ளது.


மேலும் செய்திகள்