எத்தியோப்பியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற பாதுகாப்பு தலைவர் சுட்டுக்கொலை

எத்தியோப்பியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற பாதுகாப்பு தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-06-25 22:45 GMT
அடிஸ் அபாபா,

எத்தியோப்பியா நாட்டின் அம்ஹாரா மாகாணத்தில் பாதுகாப்பு தலைவர் அசாமிநியு சிஜேவின் தலைமையில் ஒரு பிரிவினர் கடந்த சனிக்கிழமை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பிராந்திய ஆட்சித்தலைவர் அம்பாசெவ் மெகோனனையும், அவரது ஆலோசகரையும், அசாமிநியு சிஜே அனுப்பிய கூலிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

அதேபோல் எத்தியோப்பிய ராணுவ தளபதி சியாரே மெகோனனை, அவரது மெய்க்காப்பாளர் சுட்டுக்கொன்றார். எனினும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பாதுகாப்பு தலைவர் அசாமிநியு சிஜே தலைமறைவானார்.

இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதோடு, பிராந்திய தலைவர் மற்றும் அவரது ஆலோசகரின் கொலைக்கு காரணமான அசாமிநியு சிஜேவை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

மாகாண தலைநகர் பகிர்டரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அசாமிநியு சிஜேவை கைது செய்ய சுற்றிவளைத்தபோது, அவர் தப்பி ஓட முயன்றதாகவும், எனவே அவரை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்