ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தலீபான்கள் மோதலில் 19 பேர் பலி; மற்றொரு தாக்குதலில் 25 பேர் சாவு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொடர்ந்து பாதுகாப்பு படையினரையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-06 22:45 GMT

காபூல்,

ஹெராத் மாகாணம், கராக் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது நேற்று தலீபான் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்தது.

இதன் முடிவில், பாதுகாப்பு படையினர் 9 பேர், தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் தலீபான் தளபதி முல்லா கவுசூதிங்கும் ஒருவர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கிச்சண்டையில் மேலும் 15 பயங்கரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சண்டை குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே காந்தஹார் மாகாணத்தில் மாரோப் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்களை குறி வைத்து நேட்டோ படையினர் வான் தாக்குதல் நடத்தினர். இதில் 25 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்