பாகிஸ்தானில் சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதியதில் 16 பேர் பலி

பாகிஸ்தானில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 போ் உயிரிழந்தனா். 80 போ் காயமடைந்தனா்.

Update: 2019-07-11 15:37 GMT
லாகூர்,

லாகூரிலிருந்து குவெட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த அக்பா் விரைவு ரெயில் சாதிக்பாத் பகுதியில் உள்ள வா்ஹாா் ரெயில் நிலையம் வழியாகச் சென்ற போது அங்கு நின்றிருந்த சரக்கு ரெயில் மீது அந்த ரெயில் பயங்கரமாக மோதியது. 

இதில் ரெயில் நிலையத்தில் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பக்க இணைப்புப் பாதையில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அக்பா் விரைவு ரெயில் முக்கியப் பாதை வழியாக செல்லாமல் எதிா்பாராவிதமாக சரக்கு ரெயில் நின்றிருந்த பக்க இணைப்புப் பாதைக்கு திசைமாறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரக்கு ரெயிலுடன் மோதியதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் முற்றிலுமாக உருக்குலைந்தது.  ரெயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 16 போ் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  80-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்