இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

Update: 2019-07-16 01:01 GMT
ஜகார்தா, 

புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது இந்தோனேசியா. இதனால், அந்நாட்டில் நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. 

அவ்வகையில்,   பாலி பிராந்திய பகுதியில் 00.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சேதம் குறித்த விவரங்களும் வெளியாகவில்லை. 

 அண்மையில், இந்தோனேசியாவின்   மாலுக்கு தீவுப்பகுதியில் 7.3 என்ற நிலநடுக்கம் உலுக்கியது  நினைவிருக்கலாம். 

மேலும் செய்திகள்