தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்

தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்.

Update: 2019-07-16 12:26 GMT
பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த  இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. 

குழந்தைகளின் மண்டையோடு, மூளை மற்றும் இரத்த நாளங்கள் என மிகவும் இக்கட்டான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டுள்ளனர். இதனால் குழந்தைகள் இப்போது நலமாக உள்ளனர். மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் தொடர் கண்காணிப்பின் கீழ் பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்