வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்த சீன தானியங்கி பேருந்து

சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பேருந்து ஒன்று கத்தாரில் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.

Update: 2019-07-17 09:47 GMT
சீனாவில் இயங்கி வரும் பிரபல நிறுவனம் ஒன்று, ரயில் பெட்டிகளை போல் தோற்றம் கொண்ட 32 மீட்டர் நீளம் கொண்ட அதிவிரைவு தானியங்கி பேருந்து ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த பேருந்தானது 2022ல் நடைபெறவுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது கத்தாரில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்சார்கள் உதவியுடன் இயங்கும் இந்த பேருந்து சாலையின் அளவை கணக்கீடு செய்து, அதற்கேற்றால்போல் பயணத்தை தீர்மானிக்கிறது. மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பேருந்தில் ஒரே நேரத்தில், 307 பயணிகள் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த பேருந்தின் சோதனை ஓட்டம் கத்தாரில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்