சுற்றுலாவாசிகளின் தலைக்கு மேல் சில அடி தூர உயரத்தில் உரசி சென்ற விமானம்

கிரீஸ் நாட்டில் சுற்றுலாவாசிகளின் தலைக்கு மேல் சில அடி தூர உயரத்தில் விமானம் உரசி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Update: 2019-07-17 11:27 GMT
கிரீஸ் நாட்டில் ஸ்கியாதோஸ் விமான நிலையம் உள்ளது.  இதனருகே கடற்கரை ஒன்று உள்ளது.  இதனால் இங்கு பொழுதுபோக்குவதற்காக சுற்றுலாவாசிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்த விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க வரும்பொழுது தரையில் இருந்து மிக குறைந்த அடி உயரத்திலேயே பறந்து செல்லும்.  இதனால் ஐரோப்பியாவின் செயின்ட் மார்ட்டன் என இந்த விமான நிலையம் அழைக்கப்படுகிறது.  கடற்கரையை விமானங்கள் நெருங்கும்பொழுது அங்கிருக்கும் சுற்றுலாவாசிகள் தங்களது மொபைல் போன்களில் அதனுடன் செல்பி எடுத்து மகிழ்வது வழக்கம்.

சமீபத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் எம்ப்ரேயர் ஈ190 என்ற விமானம் தரையிறங்கியபொழுது, சுற்றுலாவாசிகளின் தலைக்கு மேல் சில அடி தூர உயரத்தில் விமானம் உரசி சென்றுள்ளது.  இதனால் சிலர் தங்களை காத்து கொள்ள குனிந்து கொண்டனர்.  செல்பி எடுக்க சுவர் மீது நின்ற சிலர் காற்றின் வேகத்தில் கீழே விழுந்தனர்.  ஜெட் விமானத்தின் பலத்த இரைச்சலை அடுத்து ஒரு தம்பதி கீழே தள்ளப்பட்டது.  இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 20 லட்சம் பேர் வரை கண்டுகளித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்