ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடி விசா

இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-18 05:13 GMT
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு விசிட் விசாவில் செல்வோர் நுழைவுக் கட்டணமாக ஆயிரத்து 874 ரூபாயும், 375 ரூபாய் சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு மற்றும் ஒருமுறை காலநீட்டிப்பு செய்வதற்கான புதுப்பிப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 687 ரூபாயும், சேவைக் கட்டணமாக 375 ரூபாயும் செலுத்த வேண்டும். விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு எமிரேட்டின் உடனடி விசிட் விசா பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்