இஸ்ரேல் நாட்டில் 1,200 வருடங்கள் பழமையான மசூதி கண்டுபிடிப்பு

இஸ்ரேல் நாட்டில் 1,200 வருடங்கள் பழமையான மசூதியை தொல்லியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

Update: 2019-07-18 11:35 GMT
ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டின் தெற்கே நெகெவ் பாலைவன பகுதியில் ரகத் நகரில் புதிய மசூதி ஒன்று கட்டுவதற்கான பணிகள் நடந்தன.  இதில் கட்டிடம் ஒன்று தெரிந்துள்ளது.  செவ்வக வடிவிலான திறந்த வெளியை கொண்ட மசூதி என அது அறியப்பட்டு உள்ளது.  இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி, தெற்கு பகுதியை பார்த்தபடி மிராப் அல்லது இறைவணக்கம் செலுத்தும் பகுதி உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் நாட்டு தொல்பொருள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரேபியர்கள் கடந்த 636ம் ஆண்டில் இந்த பகுதியை வெற்றி பெற்ற பின்னர் இஸ்ரேலில் இஸ்லாம் மதம் தோன்ற தொடங்கியது.  அந்த காலத்தில் இருந்த மசூதிகளில் இதுவும் ஒன்று என இஸ்லாமிய மதத்தின் தொடக்ககால வரலாறு பற்றிய நிபுணர் கிடியோன் ஆவ்னி கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்