நேபாளத்தில் நிலச்சரிவு; குழந்தை உள்பட 6 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தை உள்பட 6 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

Update: 2019-07-23 08:33 GMT
காத்மண்டு,

நேபாளத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  அங்குள்ள குல்மி மாவட்டத்தில் லிம்கா மற்றும் துலோ லும்பெக் பகுதிகளில் கனமழையை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில் துலோ லும்பெக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதைந்து போயின.  இந்த சம்பவத்தில் தர்சன் தரமு (வயது 7) என்ற குழந்தையும் மற்றும் தில் குமாரி (வயது 31) என்ற பெண்ணும் மண்ணில் புதைந்து பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர்.  இதேபோன்று லிம்கா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்து போனதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்