2003-ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

Update: 2019-07-26 12:27 GMT
அமெரிக்காவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது கடந்த 2003–ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்போது 16 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 5  கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள அந்த 5 கைதிகளும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

5 கைதிகளுக்காக மரண தண்டனையை வரும் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை  ஆர்வலர்களும், ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்