பிரான்சின் கியாஸ் நிலையம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலி

பிரான்சின் கியாஸ் நிலையம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

Update: 2019-07-29 22:28 GMT

* ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் அம்ருல்லா சலேவுக்கு, தலைநகர் காபூலில் அலுவலகம் உள்ளது. நேற்றுமுன்தினம் அந்த அலுவலகத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதலில் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

* பிரான்சின் தெற்கு பகுதியில் ஒல்லியோஸ் நகரில் உள்ள கியாஸ் நிலையம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

* பின்லாந்து நாட்டின் கஜானி நகரில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

* எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையேயான தூதரக உறவு வலுப்பெறும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்