மரணப்படுக்கையில் இருக்கும் மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி தந்தை செய்த செயல்

மரணப்படுக்கையில் இருக்கும் 2 வயது மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி விபசார விடுதி தொடங்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-03 06:06 GMT
பிரேசில் நாட்டின் சால்வடார் பகுதியில் குடியிருக்கும் 37 வயதான மேட்டஸ் ஆல்வ்ஸ் என்பவரின் 19 மாதமே ஆன குழந்தை அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையின் சிகிச்சைக்காக சுமார் 216,000 பவுண்டுகள் வங்கியில் சேமித்து வைத்துள்ளனர்.

இந்த தொகையானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் பொதுமக்களிடம் இருந்து சேகரித்தது எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தொகையானது 3 முறை சிகிச்சைக்கான மருந்து வாங்கவே போதுமானதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

தற்போது அந்த பணத்தில் இருந்து சுமார் 130,000 பவுண்டுகள் அளவு பணத்தை தந்தை ஆல்வ்ஸ் திருடி சென்று செலவிட்டுள்ளார். விலைமாதர்களுடனும், போதை மருந்துக்கும், மதுவுக்கும் அந்த பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த அவரை ஜூலை 22 ஆம் தேதி கைது செய்துள்ளனர். விசாரணையில், அந்த பணத்தில் சுமார் 11,000 பவுண்டுகளை விபசார விடுதி ஒன்றை துவங்க நண்பர்களுடன் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விலை உயர்ந்த பொருட்களும், போதை மருந்தும் வாங்கி பயன்படுத்தியுள்ளதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்