லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலி

லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலியாயினர்.

Update: 2019-08-06 22:45 GMT

* சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள யுவான்யாங் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த நகரம் வெள்ளக் காடாகி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிர் இழந்ததாகவும், 6 பேர் மாயமாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* லிபியாவின் தெற்கு பகுதியில் உள்ள முர்ஷாக் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த மத்திய தேர்தலின் போது ஜனாதிபதி டிரம்பை விமர்சித்த முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹலாரி கிளிண்டன் உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டுகளை பார்சல் அனுப்பிய வழக்கில் செஸர் சயோக் (வயது 57) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* காங்கோ நாட்டின் காசாய் மாகாணத்தில் உள்ள லுகென்யே ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு பாரம் தாங்காமல் தண்ணீரில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

மேலும் செய்திகள்