கிரீஸ் கடற்பகுதியில் நிலநடுக்கம்; அதிர்ச்சி அடைந்த சுற்றுலாவாசிகள்

கிரீஸ் நாட்டின் ஈஜியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கரையில் ஓய்வெடுத்த சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்து ஓடினர்.

Update: 2019-08-12 12:04 GMT
ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் ஈஜியன் கடலில் கிரெட் தீவு அமைந்துள்ளது.  இங்கு விடுமுறையை கழிக்க சுற்றுலாவாசிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.  இந்நிலையில், கிரேக்க புவியியலாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கிரெட் தீவிற்கு வடக்கே 70 கி.மீ. தொலைவில் 36 கி.மீ. ஆழத்தில் கடற்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.  பொருட்சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்து உள்ளது.  இதனால் பொழுதுபோக்கிற்காக, கடற்கரையோரம் நிழலில் படுத்தபடி ஓய்வெடுத்து கொண்டிருந்த சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்து எழுந்து ஓடினர்.

இதற்கு முன் ஐரோப்பிய மற்றும் மத்தியதரை புவியியல் மையம் வெளியிட்ட முதற்கட்ட தகவலில், நிலநடுக்கம் 5 என்ற அளவில் பதிவாகி உள்ளது என தெரிவித்து இருந்தது.

இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இதுவாகும்.  நேற்று காலை அங்கு 5.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடந்த ஜூலை 31ந்தேதி 5.3 என்ற அளவில் நிலநடுக்கம் இங்கு உணரப்பட்டது.  இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கின.

மேலும் செய்திகள்