தொண்டையில் பல் செட் ; மருத்துவர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிரேட் யர்மவுத் நகரை சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவர் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

Update: 2019-08-14 23:00 GMT
லண்டன்,

முதியவர்  தனக்கு இருமல் வரும்போது ரத்தமும் வருகிறது என்றும், தன்னால் எதையும் விழுங்க முடியவில்லை என்றும் மருத்துவர்களிடம் கூறினார்.

உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நிமோனியா நோய் இருப்பதாக கூறி வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் அவரது பிரச்சினைகள் சரியாகவில்லை. இதையடுத்து அவர் வேறொரு மருத்துவ மனைக்கு சென்றார்.

அங்குள்ள மருத்துவர்கள் அவரது தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது மருத்துவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முதியவரின் தொண்டையில் ஒரு பல் செட் இருப்பது எக்ஸ்ரேவில் தெரிந்தது. இது குறித்து அவர்கள் அந்த முதியவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் தனக்கு தொண்டையில் கட்டி இருந்ததாகவும், 8 நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டதாகவும் கூறினார். அப்போதுதான், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தவறுதலாக பல் செட்டை தொண்டையில் வைத்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, முதியவரின் தொண்டையில் இருந்து பல்செட்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

மேலும் செய்திகள்