காஷ்மீர் விவகாரத்திலிருந்து திசைதிருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கை -இம்ரான்கான்

காஷ்மீர் விவகாரத்திலிருந்து திசைதிருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-08-23 12:22 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான்  முயற்சி செய்ததற்கு தோல்வியே மிஞ்சியது. இந்தியா - பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சினைகளை திசை திருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம் செய்துள்ளார். 

இம்ரான் கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக எல்லையில் ஆப்கான் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊருடுவி இருப்பதாகவும், தென் மாநிலங்களிலும் ஊடுருவி இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி என்பதை கணிக்க முடிகிறது. காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சினைகளை திசை திருப்ப போலியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்