7 அடி நீள முதலை முன் பயமின்றி கோல்ப் விளையாடிய நபர்; வைரலான வீடியோ

அமெரிக்காவில் 7 அடி நீள முதலை கடந்து சென்றபோது பயமின்றி நபர் ஒருவர் கோல்ப் விளையாடிய வீடியோ வைரலானது.

Update: 2019-08-26 12:25 GMT
புளோரிடா,

அமெரிக்காவின் புளோரிடாவில் ஆர்லேண்டோ நகரில் கோல்ப் விளையாடும் மைதானத்தில் ஸ்டீல் லாபெர்டி என்பவர் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

அந்த வழியே 7 அடி நீள முதலை ஒன்று நடந்து வந்தது.  ஆனால் அதன் மீது கவனம் கொள்ளாமல் பந்து அடித்து, கோல்ப் விளையாட்டில் ஆர்வமுடன் லாபெர்டி ஈடுபட்டார்.

இந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

இதன்பின்பு கோல்ப் மைதானத்திற்கு அருகேயிருந்த ஏரியில் மூழ்கி முதலை மறைந்தது.  புளோரிடாவில் முதலைகள் பொதுமக்களிடையே வருவது ஒன்றும் புதிதல்ல.  கடந்த சில மாதங்களில், ஒரு முதலை வேலியின் மீது ஏறி சென்றதும், மற்றொரு முதலை வீடு ஒன்றின் நீச்சல் குளத்தில் காணப்பட்டதும், இன்னொரு முதலை ஜன்னலை உடைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்