பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை

பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

Update: 2019-09-06 23:30 GMT
இஸ்லாமாபாத், 

இந்தியாவில், முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோல், பாகிஸ்தானில் அதை தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமிய விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் என்ற அரசியல் சட்ட அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

பாகிஸ்தான் சட்ட மந்திரி பரோக் நசீமும் இந்த பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தண்டனை விவரங்களை பிறகு முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்