ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தை சூறையாட முயன்ற 14 பேர் கைது

ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தை சூறையாட முயன்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-08 22:57 GMT
மாஸ்கோ,

ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ரோஸ்காஸ்மோஸ்’, மாஸ்கோவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 50 பேர் வலுக்கட்டாயமாக நுழைந்து, அலுவலகத்தை சூறையாட முயன்றனர். குறிப்பாக அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்க முயன்றனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 14 பேர் பாதுகாப்பு படையினரின் பிடியில் சிக்கினர். அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடியவர்களையும் கைது செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

முன்னதாக விண்வெளி ஆய்வு மையத்தின் சுவர்களில் ஏறி, நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளை புகைப்படம் எடுக்க முயன்ற 3 பேரையும் நேற்று முன்தினம் மாலையில் அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த சம்பவங்கள் மாஸ்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்