பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியது.

Update: 2019-09-11 23:00 GMT

* ஆப்கானிஸ்தானின் தாக்கர் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதகிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

* ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் நாட்டமும், விரோதப்போக்கும் தோல்வியில்தான் முடியும் என்றும், இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டின் சாராகனி மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* இந்தோனேஷியா வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறி வருவதால், அதன் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் கரும்புகை சூழ்ந்துள்ளது. மலேசியாவின் 15 மாகாணங்களில் காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆக குறைந்து இருப்பதால் அங்கு சுமார் 400 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்