இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் மீது டேவிட் கேமரூன் தாக்கு

இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேலை, டேவிட் கேமரூன் கடுமையாக சாடி உள்ளார்.

Update: 2019-09-15 23:00 GMT
லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் 2010-16 ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்தவர் டேவிட் கேமரூன். இவர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரச்சினையில் (பிரெக்ஸிட்) பதவி விலகியவர் ஆவார்.

இவர் தனது பிரதமர் பதவி அனுபவங்கள் குறித்து ‘பார் தி ரெகார்ட்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். வரும் வியாழக்கிழமை இந்த புத்தகம் வெளியாகிறது.

இந்த புத்தகத்தில் தனது மந்திரிசபையில் வேலைவாய்ப்புத்துறை மந்திரியாக இருந்து, தற்போது போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேலை கடுமையாக சாடி உள்ளார்.

அதில் அவர், “வேலை வாய்ப்பு மந்திரியின் நடத்தைதான் என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அரசின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக ஒவ்வொரு அறிவிப்பிலும், பேட்டியிலும் பேசினார். இவ்வளவுக்கும் அவர் அரசின் ஒரு அங்கமாக இருந்தார். அவரை என்னால் பதவியை விட்டு நீக்க முடியவில்லை. ஏனென்றால் அப்படி அவரை நீக்கி இருந்தால் அவர் பிரெக்ஸிட் தியாகி ஆகி விடுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்