ஆப்கானிஸ்தானில் 3 மாகாணங்களில் 23 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் 3 மாகாணங்களில் 23 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2019-09-21 22:48 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19-வது ஆண்டாக நீடித்து வருகிற போரை முடிவுக்கு கொண்டு வர இன்னும் ஒரு வழி இல்லை. அங்கு தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் லோகார் மாகாணத்தில் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் அமெரிக்க வீரர்கள் 8 பேர் பலியாகினர். இது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இதையடுத்து காந்தஹார், கஜினி, பாத்கிஸ் மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து, படையினர் வான்தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் மொத்தம் 23 பயங்கரவாதிகள் பலியாகினர். காந்தகாரில் 10 பேரும், கஜினியில் 3 பேரும், பாத்கிஸ்சில் 10 பேரும் பலியானவர்களில் அடங்குவர்.

ஆப்கானிஸ்தானில் 28-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் அந்த தேர்தலை தலீபான் பயங்கரவாதிகள் சீர்குலைக்க முயற்சிப்பார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. எனவேதான் இப்போது அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமாகி உள்ளன.

மேலும் செய்திகள்