பிரதமர் மோடி 74-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க்கிற்கு வந்தடைந்தார்

ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் மோடி 74-வது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க்கிற்கு வந்தார்.

Update: 2019-09-23 05:17 GMT
நியூயார்க்,

ஹூஸ்டனில்  நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டனர். 

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது கூறியதாவது:-

"பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அனைவருக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்துவதற்கான நேரம் இது. 
9/11 பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து 26/11 மும்பை தாக்குதல் வரை உலகம் முழுவதற்கும் தெரியும்.

370-வது பிரிவு குறித்து பேசிய மோடி, இந்த சட்டம் “ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை வளர்ச்சியிலிருந்து விலக்கி, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை பலப்படுத்தியுள்ளது” என்றார்.

டிரம்ப் பேசும்போது கூறியதாவது:-

இரு நாடுகளும் "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில்" உறுதியாக இருப்பதாகக் கூறினார். எங்கள் சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் எல்லைகளை பாதுகாக்க வேண்டும்  என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன. எல்லைப்  பாதுகாப்பு அமெரிக்காவிற்கு இன்றியமையாதது, அதுபோல் இந்தியாவுக்கும்  இன்றியமையாதது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான அமெரிக்கா தெற்கு எல்லைகளில் நடவடிக்கை  எடுத்து வருகிறது.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு மீதான நடவடிக்கைகளுக்கு  ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி 74-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க்கிற்கு  வந்தார்.

ஹூஸ்டனில்  நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டனர்.  உரை நிகழ்த்திய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையின் 74 வது அமர்வில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு வந்தார்.

ஐ.நா பொதுச் சபை உச்சிமாநாடு உள்பட ஒன்பது முக்கிய  நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகள்