ஒபாமாவுக்கு நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை? -டிரம்ப் ஆதங்கம்

ஒபாமாவுக்கு நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-24 08:17 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில், நியாயமாக பார்த்தால் தனக்கு நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப்,  ”நியாயமாக செயல்பட்டார்கள் என்றால் எனக்கு நிறைய விஷயங்களுக்கு நோபல் பரிசு அளித்திருக்க  வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள்” என்றார்.

மேலும்,  ஒபாமா பதவிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள். உண்மையில் எதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று ஒபாமாவுக்கே தெரியாது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒபாமாவுடன் நான் உடன்படும் ஒரே விஷயம் இதுமட்டும்தான்” என்றார்.

மேலும் செய்திகள்