ஈராக்கில் ஆர்ப்பாட்டம் : துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

ஈராக்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், அதனால் ஏற்பட்ட வன்முறையிலும் 5 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-10-03 06:06 GMT
பாக்தாத்,

ஈராக்கில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி அரசுக்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டம் வெடித்து உள்ளது. அது வன்முறையாக மாற்றப்பட்டு உள்ளது.

தலைநகர் பாக்தாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனாலும் கூட்டம் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 135 பேர் காயமடைந்துள்ளனர். 

இதுபோல் ஈராக்கின் தெற்கு நகரமான நசீரியாவில் நடந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றும் மூன்று போராட்டக்காரர்கள்  கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்