ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல்

ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-10-03 06:50 GMT
பீஜிங்,

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹைக்கு என்ற இடத்தில் அரசு அதிகாரி ஒருவர், தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குறிப்பிட்ட அதிகாரியின் வீட்டை ஊழல் தடுப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, குவியல் குவியலாக தங்க பிஸ்கட்டுகள், நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட பதிமூன்றரை டன் தங்க நகைகளின் மதிப்பு 530 மில்லியன் பவுண்ட் ஆகும். மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 30 பில்லியன் பவுண்டு பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சீனாவில் அதிகபட்ச ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது வழக்கம் என்ற போதிலும் சமீபத்தில் இதுபோன்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது முதன்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்