ஹாங்காங் போராட்டம் தீவிரம்: கேரி லாம் தனது பதவியை ராஜினாமா செய்வதே சிறந்த முடிவு - மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கருத்து

ஹாங்காங் போராட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண, நிர்வாக தலைவர் கேரி லாம் தனது பதவியை ராஜினாமா செய்வதே சிறந்த முடிவு என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-04 22:45 GMT

* ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நிர்வாக தலைவர் கேரி லாம் தனது பதவியை ராஜினாமா செய்வதே சிறந்த முடிவாக இருக்கும் என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

* ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி சீனா மற்றும் உக்ரைன் நாடுகளை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்