ஈராக்: பிரதமர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் - மத குரு முக்ததாஅல் சதார் வலியுறுத்தல்

ஈராக் நாட்டில் பிரதமர் அதில் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று ஷியா முஸ்லிம் பிரிவு மத குரு முக்ததாஅல் சதார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-10-05 23:08 GMT

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டி வருகிற மூத்த எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் மாரடைப்பு ஏற்பட்டு லாஸ்வேகாஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

* ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இதில் 70 பேர் பலியாகி உள்ளனர். அங்கு பிரதமர் அதில் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று ஷியா முஸ்லிம் பிரிவு மத குரு முக்ததாஅல் சதார் வலியுறுத்தி உள்ளார்.

* ஈரான் நாட்டில் அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கியதாக கைதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலைத்தள கட்டுரையாளர்களான ஜாலி கிங், மார்க் பிர்கின் தம்பதியர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையின் ஒரு அம்சமாக, அவர் உக்ரைனுடன் நடத்திய பேச்சு தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு கேட்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு நாடாளுமன்ற கமிட்டி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

* நைஜீரியாவில் ஓயோ மாகாணத்தில் ஓக்போமோசோ அரண்மனையில் 344 வயதான ஒரு ஆமை இருந்து வந்தது. இந்த ஆமை உடல் நலக்குறைவால் செத்து விட்டது.

மேலும் செய்திகள்