311 இந்தியர்களை நாடு கடத்தியது மெக்சிகோ

உரிய ஆவணங்கள் இன்றி மெக்சிகோவில் தங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாடு நாடு கடத்தியுள்ளது.

Update: 2019-10-17 07:04 GMT
மெக்சிகோ சிட்டி,

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதை தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபடியாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர்களை தடுக்காவிட்டால், மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று  டிரம்ப் மெக்சிகோவை எச்சரித்து இருந்தார். 

இதையடுத்து, எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும் புலம் பெயர்ந்தோர்களை மீண்டும் அழைத்துக்கொள்ளவும்,  விதிகளை பரவல் படுத்துவதாக மெக்சிகோ உறுதி அளித்து இருந்தது. 

இந்த நிலையில், மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். விமானம் மூலமாக அவர்கள் அனைவரும் புதுடெல்லிக்கு அனுப்பப்படுகின்றனர். 

 மெக்சிகோவில் இருப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாதவர்கள் நாடு கடத்தப்படுவதாக மெக்சிகோ குடியேற்ற  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டொலுகா சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் 747 விமானம் மூலம் 311 இந்தியர்களும் புதுடெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். 

மேலும் செய்திகள்