பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பச்சிளம்குழந்தை உள்பட 5 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ மாகாணத்தில் உள்ள மகிலாலா நகரில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

Update: 2019-10-17 23:30 GMT
மணிலா, 

நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். துலுனன் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி பலியானாள்.

அதே போல் மக்சாய்சாய் நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 வயது பச்சிளம் குழந்தை, மேஜை சரிந்து விழுந்து பலியானது. தவோ டெல் சூர் நகரில் நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதில் வீட்டில் இருந்த தாயும், மகளும் உயிரிழந்தனர். அதே நகரில் நிலநடுக்கத்தின் அதிர்வால் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் இறந்தார்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் மகிலாலா உள்பட 4 நகரங்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்