நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது : பாகிஸ்தான்

நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-18 01:33 GMT
இஸ்லமாபாத்,

அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி,  இந்தியாவுக்குச் சொந்தமான நதி நீா் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது. அரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமையுள்ள அந்த நீா், பாகிஸ்தானுக்கு செல்வதை முந்தைய அரசுகள் தடுக்கவில்லை. 

ஆனால், நான் விவசாயிகளுக்காக போராடுவேன். பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்து, உங்களிடம் கொண்டு வருவேன்” என்று பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  இஸ்லாமாபாதில் செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது  பைசல் இது தொடர்பாக கூறியதாவது:-  “ சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்படி மேற்குப் பகுதி நதிகள்(சிந்து, ஜூலம், செனாப்) ஆகிய  மூன்றின் மீதும் பாகிஸ்தானுக்கு சிறப்பு  உரிமை  உள்ளது. 

அந்த நதிகளில் பாயும் நீரை இந்தியா திருப்பிவிட முயன்றால் அதனை பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவே கருதுவோம். அதற்கு உரிய பதிலடியும் கொடுக்கப்படும் ” என்றார்.

மேலும் செய்திகள்