இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர்- அமெரிக்கா

பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. அதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர் என அமெரிக்கா கூறி உள்ளது.

Update: 2019-10-22 05:58 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின்  தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின்  உதவி செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ் கூறியதாவது:-

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு பிரதான தடையாக உள்ளது.

 சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும், முக்கிய தடையானது பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகும்.

1972 ம் ஆண்டு  சிம்லா ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தை  பதற்றங்களைக் குறைப்பதற்கான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். 

இருதரப்பு உரையாடலை மறுதொடக்கம் செய்வதற்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கு  ஒரு முயற்சி  தேவைப்படுகிறது, மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவும் பிரதான தடையாக உள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு தகவல் தொடர்பு அல்லது பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் என்பது பாகிஸ்தான் தனது பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான மற்றும் நீடித்த நடவடிக்கைகளை எடுப்பதே என்று கூறினார்.

மேலும் செய்திகள்