2014 முதல் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் 23,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்

2014 முதல் அமெரிக்காவில் 23,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தஞ்சம் கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Update: 2019-10-30 10:55 GMT
வாஷிங்டன்

சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 7,000 பெண்கள் உட்பட 22,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம்  கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்க  குடியுரிமை மற்றும் குடிவரவு சேவையின் தேசிய பதிவு மையத்திலிருந்து தகவல் உரிமை சட்டம்  மூலம் நாபா பெற்ற தகவல்களின்படி, 2014 முதல் 22,371 இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம் கோரியுள்ளனர்.

அமெரிக்காவில்   தஞ்சம் கோரும் இந்தியர்கள் “இந்தியாவில் வேலையின்மை அல்லது சகிப்பின்மை அல்லது  இரண்டும்” இருக்கலாம்.

வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின்  நிர்வாக இயக்குனர் சத்னம் சிங் சாஹல் கூறி இருப்பதாவது:-

2014 ஆம் ஆண்டில் மொத்த இந்தியர்கள்  புகலிடம் கோரியோரில் 6,935 பேர் பெண்கள் மற்றும் 15,436 ஆண்கள் அடங்குவர். இந்த எண்ணிக்கை  தீவிர கவலை அளிப்பதாக உள்ளது. 

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக ஒரு பெண் உட்பட 311 இந்தியர்களை மெக்சிகோ நாடு கடத்தியது.

பெரும்பாலான புகலிடம் கோருவோர் நீண்ட மற்றும் பெரும்பாலும் வேதனையான காத்திருப்பு காலங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் வரை, அவர்கள் தங்கள் நாட்டில் எதிர்கொள்ளும் ஆபத்து இருந்தபோதிலும், புகலிடம் கோருவோர் உடனடியாக அமெரிக்காவில்  குடும்ப உறுப்பினர்களாக சேர்த்து கொள்வது இல்லை.

2017 ஆம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்தில், 542,411 குடிவரவு நீதிபதிகள் முன் நிலுவையில்  இருந்த வழக்குகள் செப்டம்பர் 2019 க்குள் 1,023,767  வழக்குகளாக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்