கொலம்பியாவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலியாகினர்.

Update: 2019-10-30 22:26 GMT

* ஆஸ்திரேலியாவில் கரடிபோன்று கோலா என்ற சிறிய விலங்கு உள்ளது. இந்த விலங்குகளின் முக்கிய குடியிருப்பு பகுதியான கிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், நூற்றுக்கணக்கான கோலாக்கள் கருகி பலியாகி விட்டதாக தகவல்கள்ே-ா வெளியாகி உள்ளன.

* தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், டாகியுயோ என்ற இடத்தில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலியாகினர்.

* போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டென்னில் முல்லன்பர்க்கிடம் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை விசாரணை நடத்தியது. அப்போது அவர், “நாங்கள் தவறுகள் செய்து விட்டோம், சில விஷயங்களை நாங்கள் தவறாக புரிந்து கொண்டோம்” என்று கூறி உள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் விசாரணை நடத்தப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, தீர்மானம் ஒன்றை ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

* இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியான இளவரசி மேகனை ஊடகங்கள் பின்தொடர்வதற்கும், அவருடைய அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைத்து செய்திகள் வெளியிடுவதற்கும் எதிராக 72 பெண் எம்.பி.க்கள் இங்கிலாந்தில் கட்சி வித்தியாசமின்றி ஒரே அணியில் இணைந்துள்ளனர். அவர்கள் தங்களது ஆதரவை இளவரசி மேகனுக்கு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும் செய்திகள்