அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வோம் -டுவிட்டர் தலைமை நிர்வாகி

டுவிட்டர் அடுத்த மாதம் அரசியல் விளம்பரங்களை தடை செய்யும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-31 09:29 GMT
வாஷிங்டன்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  ஜாக் டோர்சி  டுவிட்டரில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் உலகளவில் நிறுத்துவதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என கூறினார்.

சில காரணங்களால் நாங்கள்  உலகளவில் டுவிட்டரில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என டுவிட்டில் கூறி உள்ளார்.

நவம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் தடை டுவிட்டரின் வணிகத்தை கணிசமாகக் குறைக்கும். அதன் பங்குகள் மணி நேர வர்த்தகத்தில் 1.9 சதவீதம் சரிந்தன.



மேலும் செய்திகள்