ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-11-02 22:30 GMT

* உலக வல்லரசுகளில் முன்னணியில் உள்ள அமெரிக்க அரசுக்கு 23 டிரில்லியன் டாலர் ( நமது நாணய மதிப்புப்படி சுமார் ரூ.1,610 லட்சம் கோடி) கடன்கள் உள்ளதாக அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதற்கு தினமும் 100 கோடி டாலர் வட்டியாக தரப்படுகிறதாம்.

* ஆப்கானிஸ்தானில் டக்கார் மாகாணத்தில் ஒரு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஹவானா நகரம் தவிர்த்து கியூபா நாட்டின் பிற நகரங்களுக்கு தனது நாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் வர்த்தகம் பாதிக்கும்; இந்த தடையை விலக்கிக்கொள்ள வேண்டும், என 11 செனட் சபை எம்.பி.க்கள், டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சியினர்.

* அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. முதல் கட்ட ஒப்பந்தம், அயோவாவில் வைத்து விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சீனர்கள் என முதலில் தகவல்கள் வெளியாகின. இப்போது அவர்கள் வியட்நாமியர்கள் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியட்நாம் அரசுடன் இங்கிலாந்து போலீசார் பேசி வருகின்றனர்.

மேலும் செய்திகள்