சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சம்

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

Update: 2019-11-05 06:58 GMT
சாண்டியாகோ,

தென் அமெரிக்க நாடான சிலியில் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான இலாபெல் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது, வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் சிலி தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு சிலியின் இலாபெல் நகரை 8.3 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும், இதில் 13 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்