ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-11 08:16 GMT
சிட்னி,

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. கொழுந்து விட்டு எரியும் இந்தத் தீ அந்தப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இந்த தீயில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 150 வீடுகளுக்கும் மேல் எரிந்து, இடிந்து தரை மட்டமாகின. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன.

இதனையடுத்து இன்று நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த காட்டுத்தீ பேரழிவிற்கான நிலையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை இந்த காட்டுத்தீயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயின் காரணமாக வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலும் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. சிட்னி நகரை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்