நியூசிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-11-24 07:40 GMT
வெல்லிங்டன்,

நியூசிலாந்தின் வடமேற்கு பதியில் உள்ள டிகஹா என்ற இடத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

இன்று காலை 5.34 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டிகஹா நகரின் வடமேற்கு பகுதியில் சுமார் 115 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நியூசிலாந்து புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாடு பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் இருப்பதால், அங்கு நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்