மனிதர்களின் முகங்களை போன்று தோற்றமளிக்கும் பூனைகளின் வீடியோ

மனிதர்களின் முகங்களை போன்று தோற்றமளிக்கும் பூனைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2019-12-06 12:06 GMT
மாஸ்கோ

ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்த பெண்ணொருவர், தான் வளர்த்து வரும்  மெய்ன் கூன் வகை பூனைகளின் வீடியோக்களை தொடர்ந்து சமூக  வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

பூனைகள் குறித்த ஆராய்ச்சியாளரும், விலங்குகள் நல ஆர்வலருமான அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்கலப்பின் மூலம் உருவான பூனைகளின் முகங்கள், மனித முகங்களை போல் தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்