இலங்கையில் தொடர் மழையால் 10 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் தஞ்சம்

இலங்கையில் தொடர் மழையால் 10 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Update: 2019-12-08 22:23 GMT
கொழும்பு,

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதனால் தமிழர்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து 2,507 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்கு 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 64,448 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த பகுதிகளில் இருந்து 8,748 பேர் முகாம்களில் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 56 முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்