நிதியுதவி அளிக்கும் வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் நிறைவேற்றவில்லை; மத்திய மந்திரி ஜவடேகர் பேச்சு

நிதியுதவி அளிக்கும் வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் நிறைவேற்றவில்லை என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசியுள்ளார்.

Update: 2019-12-10 16:29 GMT
மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 190 நாடுகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடந்தது.  இதில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஜவடேகர் பேசும்பொழுது, நிதி பற்றிய முக்கிய விவகாரத்தினை உங்களது கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.  கடந்த 10 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்காக ஓராயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்படும் என வளர்ந்த நாடுகள் வாக்குறுதி அளித்திருந்தன.  ஆனால் அவற்றில் 2 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.

அது பொது நிதியாக இருக்க வேண்டும்.  அவற்றில் இரட்டை கணக்கு வழக்குகள் என்பது இருக்க கூடாது.  கார்பன் வெளியேற்றத்தினால் பலனடைந்த, வளர்ச்சி கண்ட நாடுகள் நிச்சயம் உலக நாடுகளுக்கு திருப்பி தரவேண்டும்.

தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பரிமாற்றம் ஆகியவை குறைந்த விலையில் கிடைப்பது என்பது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு முக்கியம்.  நாம் 2020ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம்.  பிரதிபலிப்பதற்கான நேரம் மற்றும் ஆய்வு செய்வதற்கான நேரமிது.  கண்ணாடியை உற்றுநோக்குவதற்கான காலமிது.  துரதிர்ஷ்டவச முறையில், ஒருங்கிணைந்த நாடுகள் (40 நாடுகள்) கியோட்டோ புரோட்டோகால் (சர்வதேச ஒப்பந்தம்) இலக்குகளை நிறைவேற்றவில்லை என பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்