ஈரான் - அமெரிக்கா மோதலால் பதற்றம் அதிகரிப்பு ; நிதானத்துடன் செயல்பட சீனா வலியுறுத்தல்

ஈரான் - அமெரிக்கா மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

Update: 2020-01-07 04:17 GMT
ஜெனீவா,

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் - அமெரிக்கா தலைவர்களின் வார்த்தை மோதலால் பதற்றம் அதிகரித்த நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் இந்த விஷயத்தில் மிகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.  

அமெரிக்கா தனது படையை மீண்டும் பயன்படுத்தி துஷ்பிரயோகத்தில் ஈடுபடக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்  எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்