மரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு

மரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-01-18 22:26 GMT

டோக்கியோ,

உலகம் முழுவதும் கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுந்தது. இதையடுத்து மரண தண்டனை தொடர்பாக மக்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது.

அதில், 80 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜப்பான் அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, 9 சதவீத மக்கள் மட்டுமே மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். 80.8 சதவீத மக்கள் அதை தொடர வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

மரண தண்டனையை ஆதரிக்கும் 57 சதவீதத்தினர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிகளைக் குணப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக மரண தண்டனை விதிக்கப்படுவது சரியே என்று பதிலளித்துள்ளனர். 54 சதவீதத்தினர் மரண தண்டனையை சில வகையான குற்றங்களுக்கு பதிலடி என்று கூறியுள்ளனர்.

மேலும் பதிலளித்தவர்களில் 58 சதவீதத்துக்கும் அதிகமானோர் மரண தண்டனையை ஒழிப்பதால், கடுமையான குற்றங்கள் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்