அமெரிக்காவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் 5 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-27 01:08 GMT
வாஷிங்டன்,

சீனாவில் இருந்து செல்லும் பயணிகள் மூலம் பல வெளிநாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 30 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து நேற்று 2-வதாக சிகாகோ நகரில் 60 வயது பெண்ணுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 13-ந் தேதி அவர் சீனாவில் இருந்து வந்தபோது நன்றாக இருந்தார். ஆனால் 4 நாட்களுக்கு பின்னர் பாதிப்பு தெரியவந்ததும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 5 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் 5 பேருக்கும் மருத்துவமனைகளில் தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்