சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனம்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது

சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2020-02-13 23:45 GMT
பீஜிங், 

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும் இந்த கொடிய நோய் தங்கள் உயிரை பறித்து விடுமோ என்ற அச்சத்துடனேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் உகான் நகரில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, டாக்டர்கள் அவர்களுடன் இணைந்து நடமாடினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இதயங்களை வென்று வருகிறது.

மேலும் செய்திகள்