பிரிட்டன், பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா

உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருப்பதாக அமெரிக்காவைச்சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-02-18 07:49 GMT
Image for representation
வாஷிங்டன்,  

2019 - ஆம் ஆண்டில் பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியதாக அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  ” WORLD POPULATION REVIEW”  என்ற தனியார் அமைப்பு இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில்,  2 புள்ளி 94 டிரில்லியன் டாலர் என்ற ஒட்டுமொத்த ஜிடிபியுடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக  கூறப்பட்டுள்ளது. 

 மேலும், தன்னிச்சையான பொருளாதார கொள்கையில் இருந்து மாறுபட்டு, திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 2.83 டிரில்லியன் டாலராகவும், பிரான்ஸ் நாட்டின் ஜிடிபி 2.71 டிரில்லியன் டாலராகவும் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதே சமயம், இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்